நரிமேரி ஊராட்சி ஒன்றிய. நடு நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள  காய்கறி தோட்டத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் .!

கிருஷ்ணகிரி

நரிமேரி ஊராட்சி ஒன்றிய. நடு நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள  காய்கறி தோட்டத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் .!

நரிமேரி ஊராட்சி ஒன்றிய. நடு நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள  காய்கறி தோட்டத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிமேடு ஊராட்சி   தொடக்கப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது,
 
இந்த முகாமினை துவக்கி வைக்க வருகை தந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சுமதி பச்சையப்பன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கிவைத்து முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது இம்முகாமிற்கு வருகை தரும் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள திட்டப்பணிகளை காலதாமதம் இன்றி விரைவாக வழங்கிட வேண்டும் என  சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி தோட்டத்தினை நேரில் சென்று பார்வையிட்டார்

அப்போது அங்கு மாணவ,மணவிகள் சார்பில் சாகுபடி செய்து இருந்த
முள்ளங்கி, கத்திரி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை சாகுபடி செய்யப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சியடைந்தார், 

அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சுமதி பச்சையப்பன் பள்ளிக்கு  தேவையான காய்கறிகளை நாங்கள் சாகுபடி செய்து சமையலுக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். இந்த சிறப்புப் பணியினை மாவட்ட ஆட்சியர் பாராட்டி பள்ளி வளாகத்தில் மா மரக்கன்றுகளையும் நடவு செய்தார்.

இந்த முகமில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஓய்வு பெற்ற வேளாண்மை இணை சென்னை இயக்குனர் பச்சையப்பன் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ