பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம்  மாவட்ட தலைவர் அருள்மொழிவர்மர் தலைமையில் நடைப்பெற்றது. 

இந்த போராட்டத்தில்  புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 21 மாத ஊதியமற்ற நிலுவை தொகையை உடனடியாக நீக்கப்படும் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியிடங்களை 25% ஆக உயர்த்தி வழங்க வேண்டும், அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

தமிழக அரசு மருத்துவத்துறை, நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறையின் தனியார் முகமை மூலம் பணி நியமனங்கள் செய்வதை ரத்து செய்து,  காலமுறை  ஊதியத்தில் அரசு துறைகளில்  உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைப்பெற்று வருகிறது. 

இதில் மாவட்ட துணை தலைவர் திருமால் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், துணை தலைவர்கள் பூவண்ணன், சற்குணம், இணை செயலாளர்கள் விஜயகுமார், மோகன்ராஜ், சங்கரி, ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தினேஷ், பாண்டியன், பிரேம்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி நன்றி கூறினார்.

ந.வெங்கடேசன்