ஶ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் திருவிழா! 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்! எலிகாப்டர் மூலம் கோவில் கோபுரத்தில் பூக்கள் தூவப்பட்டது.!
திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் மலையில் உள்ள ஶ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் திருவிழா! 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்! எலிகாப்டர் மூலம் கோவில் கோபுரத்தில் பூக்கள் தூவப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் அக்ராகரம் மலையில் மிகவும் பழைமையான ஶ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலை ஶ்ரீ சீனிவாச பெருமாள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக நவீன கலை நுட்பத்துடன் புரணமைக்கும் பணியில் ஈடுபட்டு அந்த கட்டுமான பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் இன்று இந்த கோவிலில் யாக சாலைகள் அமைத்து ஹோமங்கள், தீபாராதனை,மூலவருக்கு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு வேதங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றபட்டு மகா கும்பாபிஷேகம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு ஏற்பாடாக எலிகேப்டர் வரவழைக்கப்பட்டு கோவில் கோபுரத்தை மூன்று முறை சுற்றி வந்து அந்த எலிகேப்டர் மூலமாக கோவில் விமான கலசத்தின் மீதும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீதும் புனித நீர் ஊற்றபட்டு மலர்கள் தூவபட்டது.
இந்த கும்மபிஷேக விழாவில் திருப்பத்தூர் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மேலும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ந.வெங்கடேசன்