திருப்பத்தூர் பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் 42 ஆம் ஆண்டு எருது விடும் விழாவினை கொடி அசைத்து துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.!
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் 42 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழாவினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்து ஓடின
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் 42 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதி விமர்சையாக நடைபெற்றது
இந்த எருது விடும் விழாவினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்ரேயா குப்த்தா இ.கா.ப. விழா குழுவினருடன் உறுதி மொழி ஏற்று எருது விடும் விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த எருது விடும் விழாவில் கால் நடை மருத்துவரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காளைகளை விழாவில் அனுமதித்தனர்.
இருநூறுக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுப்பட்டனர்
இந்த எருது விடும் திருவிழாவில்
திருப்பத்தூர், மற்றும் கிருஷ்ணகிரி தருமபுரி, வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின மேலும் குறைந்த நொடியில் இலக்கை எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக 55,555 ரூபாயும் இரண்டாவது பரிசாக 50,555 ரூபாயும், மூன்றாவது பரிசாக 40555ரூபாய் என மொத்தம் 36 பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவை கண்டு களித்தனர் இந்த எருது விடும் விழாவில் மருத்துவ துறை, காவல் துறை ,தீயணைப்பு துறை, கால்நடை மருத்துவ துறை,
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்
ந.வெங்கடேசன்