தாம்பரம் மாநகர காவலில் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள்.!
சென்னை

தாம்பரம் மாநகர காவலில் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் பொதுமக்கள் அச்சம்.
30 சவரனுக்கு மேல் பறி போனது.
திருட்டு இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி நான்கு பேர் கொண்ட கும்பல் இரு குழுவாக இணைந்து அனைத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தகவல்.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை தேவநேசன் நகர், அன்னை தெரசா தெருவில் வீட்டிற்கு வெளியே குழந்தைக்கு சோறு ஊட்டிய முனீஸ்வரி(33), என்ற பெண்ணின் ஒரு சவரன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் பறித்துச் சென்றனர்.
அதே போல் கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் ரயில்வே கிரவுண்டில் போடப்பட்ட பொருட்காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த சிட்ல்பாக்கத்தை சேர்ந்த ஈஸ்வரி(56), என்ற பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு.
மறைமலை நகர் பகுதில் அடுத்தடுத்து மூன்று செயின் பறிப்பு சம்பவங்கள் மளிகை கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து கடை உரிமையாளர் ராஜேஸ்வரி(50), என்ற பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு.
மறைமலை நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு.
மறைமலை நகரில் பவதாரணி(21), என்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு.
கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லையில், வல்லாஞ்சேரியில் டீக்கடையில் அம்மிணி(49), என்ற பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு.
ஊரப்பாக்கம் காரணைப்புதுச்சேரி மெயின் ரோட்டில் மளிகை கடையில் ஆயிஷா(32), என்ற பெண்ணிடம் 4 சவரன் செயின் பறிப்பு.
ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் ஒரு கடையில் மகேஸ்வரி(44), என்ற பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு.
ஊரப்பாக்கம் வைகை நகரில் முத்துகலா(40), என்ற பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு
மணிமங்கலம் காவல் நிலைய எல்லை ஆதனூரில் கபாலி நகரில் பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு.
மொத்தம் 30 சவரனுக்கு மேல் கொள்ளை போயுள்ளது.
மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது தாம்பரம் அருகே இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நேற்று மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை தொடர்ந்து நான்கு பேர் இரு குழுவாக சேர்ந்து 10 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவம் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தாம்பரம் மாநகர காவல் போலீசாரிடம் வாக்கி டாக்கி இல்லாததால் முறையாக கம்யூனிகேசன் செய்ய முடியாமல் போனதே 3 மணி நேரம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை என்பது போலீசாரின் குற்றச்சாட்டாக உள்ளது.
செய்தியாளர்
S S K