தி.மு.க.மாவட்ட அயலக அணி சார்பில் கீழக்கரை ஆசிக் அமீன் மருத்துவமனையில் ரத்ததான முகாம்

தி.மு.க.மாவட்ட அயலக அணி சார்பில் கீழக்கரை ஆசிக் அமீன் மருத்துவமனையில் ரத்ததான முகாம்

கீழக்கரை தி.மு.க.மாவட்ட அயலக அணி சார்பில் கீழக்கரை ஆசிக் அமீன் மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

முகாமில்  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து வடக்கு தெரு சி.எஸ்.ஐ.சர்ச் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியை தி.மு.க, மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா ( எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவங்கி வைத்தார்.

அனைத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளையும்  அயலக அணி மாவட்ட தலைவர் முஹம்மது ஹனிபா செய்திருந்தார்.

நகர்மன்ற துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் பஷீர் அஹமது,அயலக அணி துணை அமைப்பாளர்கள் இப்திகார் ஹசன்,கார்த்திகேயன், 
ஜான் மாரிக்கா, சகுபர் சாதிக்,
பிரதீப், மகாதீர் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மக்கள் டீம் காதர், 
வர்த்தக அணி துணை அமைப்பாளர் கெஜி மணிகண்டன், ராஜ்குமார்  உட்பட அனைத்து கவுன்சிலர்கள் மீரான்,பயாஸ்தீன்.சுசியான், அயலகம் சாகுல் மற்றும் இரத்த உறவுகள் ஆதில் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காதர்