போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் .!
கிருஷ்ணகிரி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் .!
இன்று கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகள் மூலமாக ஊத்தங்கரை வாழ் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு மற்றும் பேரணியை ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, ஊத்தங்கரை துணை கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஊத்தங்கரை அனைத்து வணிகர்கள் சங்கம் மற்றும் ஊத்தங்கரை நேசம் தொண்டு நிறுவனம் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் போது போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை, நான் முழுமையாக அறிவேன். போதைக்கு ஆளாக மாட்டேன். என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைக்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன். போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த, என் பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் வழியே, போதைப் பொருட்களை, தமிழகத்தில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன் என்று மாணவ மாணவியர்கள், ஆசிரிய பெருமக்கள், வியாபாரிகள் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியை சார்ந்த உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ