வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கிய த வெ க

வாலாஜாபேட்டை

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கிய த வெ க

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு தவெக கட்சியினர் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கினர்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மகளிர் அணி சார்பாக மகளிர் தினவிழாவை முன்னிட்டு மகளிர் அணி நிர்வாகிகள் பவானி உதயகுமார், பத்மப்பிரியா, இந்துமதி, சூரியகாந்தி, ரத்னா, நர்மதா, கவிதா, பத்மா, அனிதா, பிரேமலதா, ஆகியோர் ஏற்பாட்டில் ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை  வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை பொது மருத்துவமனைக்கு  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பூக்கடை மோகன் தலைமை தாங்கி நோயாளிகள் பயன்பெறும் வகையில் இரண்டு சக்கர நாற்காலிகளை மருத்துவமனை நிர்வாகத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினியிடம் வழங்கினர்.

இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை நகர நிர்வாகி சஞ்சய், வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியம் சுரேஷ், திமிரி மேற்கு ஒன்றியம் மணிகண்டன், கணியம்பாடி ஒன்றியம் விஜயகுமார், திமிரி பேரூர் விஜய், மற்றும் மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட துணைச்செயலாளர் சசிகலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலைவாணி, ராஜலட்சுமி, துர்காதேவி, லோகேஷ், முஹம்மத்யாசின், திரவிநாதன், மேற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கார்த்திக், மகாவீர் நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் பிற அணி மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

செய்தியாளர்

அருள் அரசன்