ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது.இருசக்கர வாகனம் பறிமுதல்.!

ராணிப்பேட்டை

ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது.இருசக்கர வாகனம் பறிமுதல்.!

ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது.இருசக்கர வாகனம் பறிமுதல்.!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் பகுதியில் கொண்ட பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மனோகர் தலைமையில் போலீசார் வாகன தணிகை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்ததை  தொடர்ந்த விசாரித்தபோது அனுமதியான் பேட்டை பகுதியை சேர்ந்த சுகுமார் 47 என்பதும் விற்பனைக்காக ஹன்ஸ் மற்றும் குட்கா பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது

பின்னர் போலீசார் 14 கிலோ ஹான்ஸ்  மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்

ஆர்ஜே.சுரேஷ் குமார்