உலக மகளிர் தினம் சார்பாக விளையாட்டு போட்டிகள் மற்றும் மாரத்தான் போட்டி.!
ராணிப்பேட்டை
உலக மகளிர் தினம் சார்பாக விளையாட்டு போட்டிகள் மற்றும் மாரத்தான் போட்டி.!
ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் காவல் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் விதமாக மாவட்ட அளவிலான பெண்களுக்கான மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இப்போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெண்களின் கல்வி குறித்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகளை கூறியவர் பெண்கள் பாதுகாப்புக்காக காவல்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கத்தையும் அவர் அறிவித்தார்
முன்னதாக பெண்கள் சிலம்பம் சுற்றி தங்களது திறமையை வெளிப்படுத்தி காண்போரை வியக்க வைத்தனர்
பெண்கள் சிறுமிகள் என இரண்டு பிரிவுகளாக மூன்று கிலோமீட்டர் ஐந்து கிலோ மீட்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாரத்தான் போட்டியானது நடத்தப்பட்டது
நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் என ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர்
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்வில் RTO ராஜராஜன் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ச. ஞானசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்
செய்தியாளர்
ஆர்ஜே. சுரேஷ்.