நோயின்றி நலமாக வாழ கடைபிடிக்க வேண்டியது.!
Health information

நோயின்றி நலமுடன் வாழ நாம் தினசரி கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்.!
அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும்.
தினமும் குளிர்ந்த நீர் அல்லது வெது வெதுப்பான நீரில் குழிக்க வேண்டும்.
அதிகாலையில் எழுந்தவுடன் குறைந்த பட்சம் 10 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும்.
அதிகாலையில் சுத்தமான காற்று வீசுவதால் அதில் நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் அதிகளவு கிடைக்கும்.
சுவாசிக்கும் போது வாயால் சுவாசிக்கக் கூடாது. மூக்கால் நன்கு காற்றை இழுத்து சுவாசிக்கவும்.
சாப்பிடும் போது பேசக் கூடாது, உணவை நன்றாக மென்று சுவைத்து உண்ண வேண்டும்.
தினசரி உணவில் காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள் , நெய், மோர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நேரம் தவறி சாப்பிடுவதை தவிற்க்கவும், எப்போதும் அளவாக அதாவது வயிறு கொஞ்சம் காலியாக இருக்குமாறு உணவை உண்ண வேண்டும்.
நாக்கின் சுவைக்கு அடிமையாகாமல் உடல் நலன் கருதி உப்பு, சர்க்கரை, காரம் இவற்றை உணவில் குறைத்து சாப்பிடுவது நன்மையே.
அமைதியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். அடிக்கடி கோபப்படுதல், உணர்ச்சி வசப்படுதல் இவற்றை தவிர்த்தால் ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி போன்றவைகளிலிருந்து நம்மை காக்கலாம்.
உடலுக்கு புத்துணர்ச்சியும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் கிடைக்க மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உடலை கட்டுக் கோப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க தினசரி உடற் பயிற்சி உதவிடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக உடலுக்கு கேடு விளைவிக்கும் புகையிலை பொருட்களான பீடி, சிகரெட், மூக்குப்பொடி, புகையிலை சேர்த்த வெற்றிழை பாக்கு, ஹன்ஸ்,சாந்தி,கூல் லிப், பான் பராக் போன்ற புகையிலை அடங்கிய பொருட்களை தவிற்க்க வேண்டும்.
மதுவிற்கு அடிமையாவதால் உங்கள் உடல் நலனும் கெட்டு, உங்கள் குடும்பமும் சீரழிந்து, மது மற்றும் போதை பொருட்களால் என்ன செய்கிறோம் என்பதைக் கூட அறியாமல் பிறரையும் காயப்படுத்துவது கூடாது.
மது,மாது,சூது இவை யாவும் உன்னையும் அழித்து உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அழித்தே தீரும்.
நலமுடன் வாழ கடை பிடியுங்கள் நல்ல பழக்க வழக்கங்களை.
அன்புடன்
மு.ர.