குரோம்பேட்டையில் சரக்கு வாகனத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது. 707 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். !
சென்னை
குரோம்பேட்டையில் சரக்கு வாகனத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது. 707 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை, பான்ஸ் மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் தயாள் தலைமையிலான போலீஸார் அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை மடக்கி பிடித்து விசாரித்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது, குட்காவை பறிமுதல் செய்த போலீஸார் அதில் இருந்த ரமேஷ் (52), என்பவரை கைது செய்து விசாரித்தனர்
அவர் கொடுத்த தகவலின் பேரில் முருகன்(31), எனபவரை கைது செய்தனர்.
இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் புகையிலைப் பொருட்களை பெங்களூரில் இருந்து ரமேஷ் என்பவர் கொண்டு வந்து குரோம்பேட்டை சாந்தி நகரில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் முருகனிடம் கொடுப்பதாக கூறினார், அவரை பிடித்து விசாரித்த போது நாகல்கேணி சரவணன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையிலும், ராதா நகர் லட்சுமணன் என்பவரது மிக்சர் கடைக்கும் விநியோகம் செயத்தாக தெரிவித்தார் அவர் பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார் மொத்தமாக 707 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
சிறப்பாக செயல்பட்டு பல மாதங்களாக பெங்களூரில் இருந்து குரோம்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் குட்கா கடத்தி வந்து விநியோகம் செய்த கும்பலை கைது செய்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து இருவரை கைது செய்த குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் தயாள் மற்றும் காவல் குழுவினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் பாராட்டினார்.
செய்தியாளர்
S S K
