கொல்லப்பள்ளி கிராமத்தில் புதியதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை அருள்முருகன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.!
ஆண்மீகம்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அருள்முருகன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காசி கங்கா தீர்த்தம் கலசம் எடுத்து வரப்பட்டது .
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், பீமாண்டபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி கிராமத்தில் புதியதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு
ஸ்ரீ வள்ளி தெய்வானை அருள்முருகன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் சன்னதியில் இருந்து துவங்கிய இந்த காசி கங்கா தீர்த்த ஊர்வலமானது கொல்லப்பள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து ஏரியிலிருந்து காசி கங்கா தீர்த்தம் கலசம் எடுத்து வரப்பட்டது.
பின்னர் காசி கங்கா தீர்த்த கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளத்தாளங்களுடன் தலையில் பெண்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட காசி கங்கா தீர்த்த கலசங்கள் திருக்கோவில் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது,
இதனைத் தொடர்ந்து காசி கங்கா தீர்த்த கலசங்ளுக்கு யாக காலபூஜையில் வைக்கப்பட்டு யாக பூஜைகள் துவங்கியது.
முதல் நாள் நிகழ்ச்சியாக முதல் கால பூஜையில் மங்கல இசை, கங்காபூஜை, கணபதி பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், முருக சங்க சிரஹனம், கொடியேற்றுதல், மற்றும் கங்கணம் கட்டுதல், நிகழ்ச்சியும் இரண்டாம் கால பூஜைகளான காசி கங்கா தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் புற்று மண் எடுத்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோபுர கலச பிரதிஷ்டை மற்றும் 108 கலச பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த யாக பூஜையை தொடந்து அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை அருள்முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த தீர்த்த குடம் ஊர்வலத்தில் கொல்லப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஶ்ரீஅருள் முருகனை வழிபட்டு சென்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
