சங்கீதா எங்கே விஜய்?.. ஏன் பிரிந்தீர்கள்?..நீங்கள் எப்படி முதலமைச்சர்..விட்டு விளாசிய பத்திரிகையாளர்
1.
சென்னை: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது.
விஜய் அரசியலுக்கு வருவார் என்ற ஆரூடம் சில மாதங்களுக்கு முன்பு பலித்தது. அதன்படி அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் கட்சி தொடங்கியதுமே கட்சியின் பெயரில் எழுத்து பிழை இருப்பதாக ட்ரோலுக்கு உள்ளானார். அதனையடுத்து நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனையடுத்து கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் லீவு விட்ட ஒருவர் விஜய் மட்டும்தான் என அதனையும் கடுமையாக ட்ரோல் செய்தார்கள்.
முதல் மாநில மாநாடு: ஆனால் சினிமாவுக்குள் வந்தபோது எப்படி ட்ரோல்களை சந்தித்தாரோ அதுபோல் இதிலும் ட்ரோலை சந்திக்கிறார். கண்டிப்பாக சினிமாவில் வென்றதுபோல் அரசியலிலும் வெல்வார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடந்தது. இதில் மொத்தம் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் 80 கோடி ரூபாய்வரை செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.
விமர்சனத்தை சந்தித்த விஜய்யின் பேச்சு: மாநாட்டில் பேசிய விஜய் பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். அதேசமயம் தமிழ்நாட்டை ஆளும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவருக்கு எதிராக திமுகவினர் களத்தில் குதித்திருக்கிறார். அதேபோல் திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்று அவர் பேசியதை அடுத்து அவருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பேச ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இவ்வளவையும் கேட்டுக்கொண்டு விஜய் அமைதியாகவே இருக்கிறார்.
சங்கீதா வரவில்லை: இதற்கிடையே விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சில மனஸ்தாபங்கள் இருந்தன. எனவே அவர் மாநாட்டுக்கு வரமாட்டார் என்று ஒருதரப்பினர் கருதினர். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் கலந்துகொண்டார். அதேசமயம் விஜய்யின் மனைவி சங்கீதாவோ மகனோ மகளோ வரவில்லை. இதன் காரணமாக விஜய்க்கும் சங்கீதாவுக்கும் பிரச்னை இருப்பது ஒருவேளை உண்மைதானோ என்ற பேச்சையும் சிலர் பேச தொடங்கினார்கள்.
கடலூர் ஜோசியக்காரர்: ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா வராததற்கு பின்னால் கடலூர் ஜோதிடர் ஒருவர் இருப்பதாகவும்; அவரது பேச்சை கேட்டுத்தான் விஜய் சங்கீதாவை பிரிந்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியா, "எம்ஜிஆர் தனது மனைவி ஜானகியுடன் எங்கும் வந்தார். கருணாநிதி தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாளுடன் வந்தார். ஸ்டாலின் துர்காவுடன் வருகிறார். விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் வந்தார். ஆனால் விஜய்?.. சங்கீதா எங்கே விஜய். கடலூர் ஜோதிடக்காரர் சந்திரசேகர் பேச்சை கேட்டு மனைவியை பிரிந்திருக்கிறீர்கள். நீங்கள் எப்படி தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆவீர்கள்" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.