அரசு உயர்நிலைப்பள்ளியில் 60 ஆண்டு வைர விழா நினைவு வாயில் திறப்பு விழா நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 60 ஆண்டு வைர விழா நினைவு வாயில் திறப்பு விழா நடைபெற்றது, இதனை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள அஞ்சூர் ஜெகதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 60 ஆண்டு வைர விழாவினை முன்னிட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் நினைவு நுழைவு வாயில் கட்டி முடிக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது,இந்த திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளாக பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள நினைவு நுழைவு வாயிலை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.


பள்ளியின் நுழைவு வாயில் திறப்பு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்சிகளுடன் நடைபெற்ற இந்த விழாவின் போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பேசுகையில்......
தமிழக முதல்வர் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மீதிவண்டி, மடிக்கணினிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களை பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இப்பள்ளி 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த விழாவின் போது ஒன்றிய செயலாளர் அறிஞர், பொதுக்குழு உறுப்பினர்கள் அஞ்சூர் நாகராஜ், பிரபாகரன், பாலாஜி, அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
