இந்திரா காந்தியின் பிறந்தநாள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரின் பிறந்தநாளில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க ஒன்றிணைவோம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன்.!
கிருஷ்ணகிரி
முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரின் பிறந்தநாளில்
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க ஒன்றிணைவோம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினருமான எல் சுப்பிரமணியன் தனது செய்தி குறிப்பில்
இந்தியாவின் இரும்பு மங்கையும், முன்னாள் பாரத பிரதமருமான அன்னை இந்திரா காந்தியின் பிறந்த இன்நன்னாளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவியும், பாராளு மன்ற உறுப்பினருமான அன்னை சோனியா காந்தியின் நல்லாசியுடன்,
எங்களின் இதையத்தில் என்றும் குடியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் எழிச்சி நாயகனும், எங்களின் வருங்கால பாரத பிரதமரும், அன்பின் பிறப்பிடமும், ஆற்றலின் இருப்பிடமும், உள்ள எங்களது இளம்தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ஆசியோடு இன்று பிறந்த நாள் காணும், கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் எம்.பி.யை வாழ்த்துவதற்கு வயதில்லை என்றாலும் வணங்கி பல்லாண்டு காலம், வாழ்க, வாழ்க என இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்.
குறிப்பாக இந்த நன்நாளில் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்தள்ள எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒன்றுனைந்து குரல் கொடுப்போம் என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் எல்.சுப்பிரமணியன்.
செய்தியாளர்
மாருதி மனோ
