ஆற்காட்டில் முதல்வரின் 77 வது பிறந்தநாள் விழா.!

வேலூர்

ஆற்காட்டில் முதல்வரின் 77 வது பிறந்தநாள் விழா.!

 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர திமுக சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 77வது வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நகர செயலாளர்A.V. சரவணன் தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர். காந்தி கேக் வெட்டி 
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கட்சியின் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 

இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல் ஈஸ்வரப்பன் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர்  வினோத் காந்தி 
ஏ கே சுந்தரமூர்த்தி டாக்டர் சரவணன் நகரத் துணைச் செயலாளர்கள் சொக்கலிங்கம்
ஏ.ஜி. ரவிக்குமார் ருக்மணி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர்  கலந்து கொண்டனர்.
இறுதியில்  பொதுமக்கள் 2000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

செய்தியாளர்

ஆர்.ஜே.சுரேஷ்குமார்.