நெமிலியில் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு நல உதவிகள்.!

ராணிப்பேட்டை

நெமிலியில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையத்தில் பிரம்மாண்ட மேடை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் புனித துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு தமிழ் வாழ்க என உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு பள்ளி மாணவ மாணவிகள் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்பு பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்

ஆர்ஜே.சுரேஷ்குமார்