கெட்டுப் போன கேக் சாப்பிட்டதால் குழந்தைக்கு வாந்தி.! பேக்கரி கடைக்கு சீல்.!

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே செயல்பட்டு வரும் தாஜ் கேன்டீன் பேக்கரி கடையில் ராஜ்குமார் என்பவர் தனது நான்கு வயது மகனுடன் வந்து ஐஸ் கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்

பின்னர் வீட்டில் நான்கு வயது சிறுவர் ஐஸ் கேக் சாப்பிட்ட போது சிறுவன் வாந்தி எடுக்க தொடங்கியுள்ளார் 

இதனை கண்ட ராஜ்குமார் சிறுவன் சாப்பிட்ட கேக்கை பார்த்தபோது  கேக் கெட்டு போயிருப்பதை  உறுதி செய்த ராஜ்குமார் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரனுக்கு தகவலை தெரிவித்து தாஜ் கேன்டீன் பேட்டரி கடைக்கு வரவழைத்துள்ளார்

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தாஜ் கேன்டீன் பேக்கரி கடையில்  ஆய்வை மேற்கொண்டு காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்

தாஜ் கேன்டீன் பேக்கரி கடையினை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர் 

மேலும் சிறுவனுக்கு வழங்கிய கேக்கை ஆய்வு செய்வதற்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

செய்தியாளர்

ஆர்ஜே. சுரேஷ்குமார்.