சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்.!

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம்

ஆற்காடு- செய்யார் செல்லும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது 

இதன் காரணமாக பல ஆண்டுகளாக சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது

சாலை விரிவாக்க பணிகளின் காரணமாக பழமை வாய்ந்த மரங்கள் அடியோடு அகற்றப்பட்டு வரும் நிலையில் இயற்கை வளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து பாமக கட்சியின் பசுமை தாயகம் இயக்கம் சார்பில் புதுப்பாடி பகுதி அருகே நூறு ஆண்டுகள் மேலான பழமை வாய்ந்த ஆலமரம் அடியோடு அகற்றப்பட்டு இருக்கும் இடத்திற்கு பேரணியாக வருகை தந்து வெட்டப்பட்டுள்ள ஆலமரத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவியும் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்

அப்போது அங்கு பெண்கள் ஒன்று கூடி தரையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்தது போல ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் காண்போரை கண்கலங்க செய்ததோடு மரங்களின் முக்கியத்துவம் குறித்து  அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது

மேலும் சாலை விரிவாக்க பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழக அரசு மரங்களை அடியோடு சாய்த்து அகற்றுள் நிலையில் அம் மரங்களை வேறு இடங்களில் மாற்று நடவு செய்ய வேண்டும்  என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

செய்தியாளர்

ஆர்.ஜே.சுரேஷ்