மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு .!
தென்காசி

மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
தென்காசி அக் 09
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சின்ன காளான்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மணி என்பவரின் மகன் பூவைலிங்கம் (23), ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கஞ்சா, ஆயுத தடைச் சட்டம் போன்ற பல்வேறு முன் வழக்குகளை கொண்ட கீழஆம்பூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரம்மாச்சி என்பவரின் மகன் கருத்தபாண்டி என்ற கார்த்திக் (24) மற்றும் செங்கோட்டை காவல் நிலையத்தில் தொடர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டை பீர்முகமது என்பவரின் மகன் முஸ்தபா கமால் (33) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பட்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்