தென்காசியில் மதிமுக சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா.!
தென்காசி
தென்காசியில் மதிமுக சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா
தென்காசி , நவ:- 27
தென்காசியில் தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி நம்பிராஜன் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடை பெற்ற விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அவைதலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து பிறந்தநாள் கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
மதிமுக பொதுக்குழு உறுப்பினர் ரெங்கசாமி, குற்றாலம் பேரூர் கழக செயலாளர் வேல்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் கைகொண்டான், வார்டு
செயலாளர்கள் செல்லப்பா சுடலை நாதன், முத்துராஜ், முத்துகிருஷ்ணன், கண்ணன், ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
