சென்னையில் நடைபெற்ற படத் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய விசிக தலைவர் தொல்.திருமா.!

அரசியல்

சென்னையில் நடைபெற்ற படத் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய விசிக தலைவர் தொல்.திருமா.!

காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னால் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் நினைவேந்தல் கூட்டத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

திருமா வளவன் உரையாற்றுகையில் பெரியாருக்கு பின் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என திரு.ஈவிகேஎஸ். இளங்கோவன் தன்னை  பாராட்டினார் என்றும், முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கை பொருளாதார நிபுணர் என சுருக்கி பார்த்துவிட முடியாது எனவும் மன்மோகன் சிங் மிகச்சிறந்த ஆட்சி நிர்வாக திறமையுள்ளவர், முதிர்ச்சியுள்ளவர் 
எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.  

இந்நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

தகவல்

வி.ஆர். ஜெயந்தி 

மாநில கருத்தியல் பரப்பு துணைச் செயலாளர் ( விசிக )