அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி நீட்டிக்கப்படுமா..! பறிக்கப்படுமா.!
அரசியல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது புதிய தலைவரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி
எதிர்கட்சியாக உள்ள அதிமுகவை பின்னுக்கு தள்ளி ஸ்கோர் செய்தார். இதனால் திமுகவின் மேல் அதிருப்தியில் உள்ளவர்கள் பாஜக மீது பார்வை திரும்பியது. இருந்த போதும் அண்ணாமலையின் அதிரடி அரசியலால் கூட்டணி கட்சியான அதிமுகவும் பாதிக்கப்பட்டது. இதனால் பாஜகவுடன் கூட்டணியே வேண்டாம் என விலகியது அதிமுக,
https://www.newstodaytamil.com/VCK
இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் படு தோல்வி அடைந்தது. பல இடங்களில் டெபாசிட் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அதிமுகவுடன் கூட்டணி உடைய அண்ணாமலை தான் முக்கிய காரணமாக இருந்ததாக தேசிய தலைமை கருதுகிறது.
இருந்த போதும் அண்ணாமலையின் அரசியலால் தமிழகம் முழுவதும் பாஜக பரவலாக வளர்ந்துள்ளது. எனவே இதையே பாஜக விருப்புகிறது. இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையின் பதவி காலம் முடிவடையவுள்ளது. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியானது தீவிரம் அடைந்து வருகிறது.
அந்த வகையில் பாஜகவை பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில தலைவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். ஒருவர் இரண்டு முறை மட்டுமே தலைவராக இருக்க முடியும்.
இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு கே.அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவருடைய பதவிக் காலம் நிறைவடைகிறது. தற்போது கிளைக்கழகம் முதல் மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதற்கான பட்டியல் இன்று வெளியாகவுள்ளது.
மேலும் புதிய மாநில தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டமானது ஜனவரி 20ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டு பாஜக மூத்த நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன் பெயர்களும் பட்டியலில் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவை தலைமையேற்று நடத்த வலுவான தலைவரை நியமிக்க பாஜக தேசிய தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
எனவே தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலைக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவலை தமிழக பாஜக வட்டாரங்கள் கூறி வருகிறது.