அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.ஹாஜா முயீனுத்தீன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

அதிராம்பட்டினம் பிப் 1
அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கால்லூரியில் மொளலவி ஆலிம், ஃபழில் பட்டமளிப்பு விழா கல்லூரி நிர்வாகிகள் முன்னிலையில் ,அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மொளலவி கே.டி. முஹம்மது குட்டி முஸ்லியார் தலைமையில் அல்மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி வளாகத்தில் ஹிஜ்ரி 1446 ஷஃபான் பிறை 2 (1.02.2025) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக மொளலான மொளலவி அல்ஹாபிழ் பி,அப்துல்காதிர் ஆலிம் காஷிஃபி கிராத் ஒதி துவக்கி வைத்தார். மெளலானா, மொளலவி  ஏ, முஹம்மது நெய்னா ஆலிம் ( பேராசிரியர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி) வரவேற்று பேசினார் அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

மெளலானா, மொளலவி ஆஷிகுர் ரஸுல் ஷெய்குல் ஜாமிஆ  கே.டி முஹம்மது குட்டி ஃபாழில்,பாகவிஹல்ரத் ( முதல்வர் அல் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி )  மாணவர்களுக்கு ஸனது வழங்கி அறிவுரையாற்றினர்

கேரளா  ஜாமாத்துல் உலமா மாநில செயலாளர்  மற்றும் ரஷீதிய்யா அரபிக்கல்லூரி  ஏ,சி, மூசா உஸ்தாது  மற்றும் தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபையின் தலைவர் பி,ஏ, ஹாஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு உரையாற்றினர்.


தமிழ்நடு ஜமா அத்துல் உலமா சபையின் தலைவர் பி.ஏ. ஹாஜா முயீனுத்தீன் பேசுகையில் கூறியதாவது:-

மதரசா வளர்ச்சி பெற்று ஊருக்கு பெருமையும், மாணவர்கள் இல்மையும் கற்று  சிறந்தோங்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இந்த ரஹ்மானியா மதரசா கியாமத் நாள்வரை நீடித்து பல ஆலிம் பெறுமக்களை  உருவாக்க எல்லம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக,

நாம் பட்டம் பெற்று விட்டோம் இத்துடன் நமது காரியம் முடிந்து விட்டது என்று நினைக்காமல் இன்னும் எத்துனையோ மார்க்க சட்டம் தெரிந்து கொள்ள மீண்டும்,மீண்டும் மார்க்க சட்டம் கற்க முயற்ச்சி எடுக்க வேண்டும் என்றனர்
நிகழ்ச்சி நிறைவில் கண்ணியத்திற்குரிய மெளலானா முஹம்மது குட்டி முஸ்லியார் அவர்கள் உலக மக்களின் நல்வாழ்விற்கு துவா செய்த பின்பு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

சாகுல்