ஒரப்பம் கிராமத்தில் சட்ட மன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக வைக்கப்பட்ட பேனரை இரவேடு இரவாக அகற்றிய காவல்துறையினர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தில் சட்ட மன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக வைக்கப்பட்ட பேனரை இரவேடு இரவாக அகற்றிய காவல்துறையினரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓரப்பம் கிராமத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம நத்தம் நிலத்தில் செயல்பட்டு வந்தது. இந்த வாரச்சந்தை தனி நபர்கள் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி அந்த 90 சென்ட் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓரப்பம் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓரப்பம் வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து கறுப்புக்கொடி கட்டியும் பேனர்களை சந்தைப் பகுதியில் வைத்திருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வைக்கப்பட்ட பேனரை காவல் துறையினர் இரவோடு இரவாக அகற்றினார்கள்.
இதனை கண்ட ஒரப்பம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்,
அப்போது பல தலைமுறைகளாக பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த வாராச்சந்தையை ஆக்கிரமிப்பு செய்து யாரும் பயன்படுத்த முடியாத அளவிக்கு முள்வேலி அமைத்துள்ளதை அகற்றி பழையபடி வாரச்சந்தை செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக இதற்கான தீர்வுக்காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர்கள் உறுதியளித்து அங்கு இருந்து சென்றனர்,
ஆனால் இதற்கான இறுதி முடிவு தெரியும் வரை நாங்கள் அனைவரும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதோடு வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்
மாருதி மனோ
