விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் .!

கிருஷ்ணகிரி

விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓரப்பம் கிராமத்தில் கிராம நத்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இந்த வாரச்சந்தையில் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் சிலர் இந்த சந்தையை வருவாய் துறையினரின் மூலமாக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, வாரச்சந்தையை இரும்பு முள்வேலி அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஒரப்பம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக மேலாக இயங்கி வந்த விக்டோரியா சந்தை ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் வாரச்சந்தையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக  போராடி வருகின்றனர்.

ஆனால் இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்யாரும் எந்த நடவடிக்கை எடுக்காததால்  ஆத்திரமடைந்த கிராம மக்கள் வருகின்ற சட்ட மன்ற தேர்தலை புறக்கணித்து சாலை ஓரங்களில் பேனர்கள் வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, கறுப்புக்கொடி கட்டியும் தங்களது எதிப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாகவும் கறுப்பு கொடிகளையும் கட்டி வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்கணிக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே கிராம நத்தம் நிலத்தில் இயங்கி வந்த விக்டோரியா வாரச்சந்தையை  சிலர் வருவாய் துறையினர்கள் உதவிகளுடன் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து முள்வேலிகள் அமைத்து உள்ளதால் வாரச்சந்தை நடத்த முடியாத நிலை உள்ளது. ஆகையால் கடந்த 150 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விக்டோரியா வாரச்சந்தையை மீட்டு மீண்டும் வாரச்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும், வாக்கு சேகரிக்க யாரையும் கிராமத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும்,  நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ