பதவி உயர்வு பெற்ற தமிழ்நாடு மருத்துவத்துறை பொதுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஜி.சி.சக்திவேல்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இளநிலை நிர்வாக அலுவலரும், தமிழ்நாடு மருத்துவத்துறை பொதுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான ஜி.சி.சக்திவேல், பதவி உயர்வில் நிர்வாக அலுவலராக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலேயே பணியேற்ற காரணத்தால் இன்றைய தினம் அவருக்கு தமிழ்நாடு மருத்துவ துறை பொதுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ் கே சரவணன் அவர்கள் நேரில் சந்தித்து கைத்தறி ஆடை அணிவித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மருத்துவ துறை பொதுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி.க. சுமதி இளநிலை நிர்வாக அலுவலர் அவர்களும் அலுவலக கண்காணிப்பாளர் முத்துராமன், கலைக்கோவன் சின்னண்ணன், சிவன் கோவிந்தசாமி வெங்கடாஜலம், மற்றும் அமைச்சுப் பணி அலுவலர் சங்க நிர்வாகத்தினர் உடன் இருந்து அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர்
மாருதி மனோ