அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஓசூர் கிழக்குப் பகுதி கழக செயலாளர் ராஜி, தலைமையில் அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் இதில், சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்தி, கட்சி கோட்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்கள் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் விரைவாக விரிவுபடுத்தும் வகையில் செயல் திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கட்சி தாக்கத்தை அதிகரிக்க புதிய முயற்சிகள், வீடியோ, கிராபிக்ஸ், மீம்ஸ்கள் மற்றும் நேரலை (live) நிகழ்ச்சிகள் மேற்கொள்ளவேண்டியதின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது, 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் மாமன்ற உறுப்பினருமான நாராயணன், ஓசூர் ஒன்றிய கழக செயலாளர் ஹரிஷ் ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பயிற்சியாளர்கள், சேலம் மண்டலமண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சதீஷ், சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டம் செயலாளர் பிரசன்ன, சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் யாதவிரபு, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் மல்லிகா தேவராஜ், தில்ஷத்  ரகுமான், திருவண்ணாமலை மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் ஆர் சசிகுமார், பேரவை மாவட்ட இணை செயலாளர் செல்வம், மாவட்ட பிரநிதி அச்சு என்கின்ற லக்ஷ்மன், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி செயலாளர் மகேஷ், வட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் ஹரிபிரசாத்,கவுன்சிலர் பக்ஷு, தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் மஞ்சு, சார்பணி மாவட்ட நிர்வாகிகள் சூடப்பா, சக்கரவர்த்தி, மகளிர் அணி நிர்வாகிகள் பூத் கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

செய்தியாளர்

மாருதி மனோ