தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்கு பதிவு வலியுறுத்தி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பரம் .!
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்கு பதிவு வலியுறுத்தி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., துவக்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, ஊடக மைய பொறுப்பு அலுவலர் சு.மோகன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
