விவசாயிகள் பயன்படுத்தி வந்த கதிர் அடிக்கும் களத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுத்துள்ள ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை..!

கிருஷ்ணகிரி

விவசாயிகள் பயன்படுத்தி வந்த கதிர் அடிக்கும் களத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுத்துள்ள ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை..!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள நாடார் கொட்டாய் பகுதியில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த கதிர் அடிக்கும் களத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுத்துள்ள ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மல்லபாடி ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் கொட்டாய், குமரங்கனப்பள்ளி, குட்டகாடு ஆகியப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நாடார் கொட்டாய் என்ற இடத்தில் கதிர் அடிக்கும் களம் உள்ளது.

இந்த களத்தில் தான் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை கதிர் அடித்தும், உலர வைப்பதற்காகவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மல்லபாடி ஊராட்சி நிர்வாகம் விவசாயிகள் பயன்படுத்தி வந்த கதிர் அடிக்கும் களத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

கதிர் அடிக்கும் இடத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுமார் 2 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி தண்ணீரும் பாதிக்கும். அந்த வழியாக ஏரிக்கு செல்லும் தண்ணீரும் பாதிக்கும் என்பதால் குப்பை கொட்டுவதை  வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், இது வரை ஊராட்சி செயலாளர் சசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இரமகவுண்டர் கூறுகையில் ...


விவசாயிகள் பயன்படுத்தி வந்த கதிர் அடிக்கும் கழத்தில் குப்பைகள் கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு புறம்போக்கு நிலத்தில் குப்பைகள் கொட்ட மல்லப்பாடி ஊராட்சி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு பல்வேறு வியாதிகள் மற்றும் விவசாய நிலமும் பாதிக்கப்படும். 

ஆகையால் விவசாயிகள் பாதிக்காதவாறு அரசு புறம்போக்கு நிலத்தில் கொண்டு போய் குப்பைகளை கொட்டுங்கள், இல்லையேல்  மல்லப்பாடி ஊராட்சி செயலாளர் சசியை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யும் வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.

அப்போது விவசாய சங்கத்தினை சேர்ந்த அனுமந்த ராஜ், மல்லப்பாடி ஊராட்சியை சேர்ந்த பலரும் உடன் இருந்தனர்.