பர்கூர் பேரூராட்சியில், 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 12 D படிவம் வழங்கப்பட்டது. !
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், 52 - பர்கூர் சட்டமன்ற தொகுதி, பர்கூர் பேரூராட்சியில், 85 வயதுக்கு மேற்பட்ட பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் கிருஷ்ணன் அவர்களின் விருப்பத்தின் பேரில் படிவம் "12டி (12D)" வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் பர்கூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.அபிநயா, வட்டாட்சியர் சின்னசாமி ஆகியோர் உள்ளனர்.
மாருதி மனோ
