புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் காசி விசுவநாதர் திருக்கோவில் கட்டுமான பணியினை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் காசி விசுவநாதர் திருக்கோவில் கட்டுமான பணியினை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி மேற்கு நகரம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி-2, 4-வது தெரு, ஸ்ரீ பார்வதி தேவி கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் அருள்மிகு விசாலாட்சி உடனுறை அருள்மிகு காசி விசுவ நாத சுவாமி கற்கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.


இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பணியினை துவக்கி வைக்க வருகை தந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் அவர்களுக்கு திருக்கோவில் பொறுப்பாளர் திருமதி காயத்திரி கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காசிவிசுவநாதர் திருக்கோவில் கட்டுமான பணியினை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அப்போது கோவில் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர செயலாளர்களான அஸ்லம், வேல்மணி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கவுன்சிலர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கிளை செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், BLA 2 உறுப்பினர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
