கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைத்தின் மீது தாக்குதல். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைத்தின் மீது தாக்குதல். !

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் தாகத்தினை தீர்க்கும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை  உடைத்த சமுக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமுக ஆர்வலர் டாக்டர் சந்திரமோகன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்திடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தார்.

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் 
சந்தித்தார்.  மத்திய அரசின் வாக்கு திருட்டுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் வந்து செய்வதால் பயணிகளின் தாகத்தினை போக்கிடும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி நவீன சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைத்து 1 ரூபாய் மற்றும் 5 ரூபாய்க்கு குடி தண்ணீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வந்ததை சமுக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதனால் பல லட்சம் செலவு செய்யப்பட்ட இந்த குடிநீர் நிலையத்தினை உடைத்த சமுக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பட வேண்டும், மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயனிகளுக்கு குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி  சமுக ஆர்வலர்கள் டாக்டர் சந்திரமோகன் மற்றும் ரோஷன்பாய் ஆகியோர் காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் கோபிநாத்திடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர். அப்போது விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு நவீன சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபிநாத் குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்து பேசிய சமுக ஆர்வலர் சந்திரமோகன் கூறுகையில் .....
காங்கிரஸ் நாடாளு மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக நவீன குடிநீர் நிலையம் அமைத்து குடித்தண்ணீர் வழங்கப்பட்டு வந்ததை சமுக விரோதிகள் உடைத்து உள்ளதை சரி செய்து பயணிகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தற்கு டாக்டர் சந்திரமோகன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர்

மாருதி மனோ