ஆவின்  பால் உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி

ஆவின்  பால் உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம், கரகூர் ஆவின்  மகளீர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இன்று ஆவின்  பால் உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில்   2023, 2024 கூட்டுறவு ஆண்டு பால் ஊற்றிய  உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டின் கூடுதல் பால் விலை பணமாக போனசாக வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு  சங்கத்தின் செயளாளர்  சொர்ணலதா அனைவரையும் வறவேற்றார்.  முன்னாள் தலைவர்  மகேஷ்வரி இராமகவுண்டர் தலைமை வகித்தார்.  சிறப்பு அமைப்பாளராக தமிழக  விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர்   கே எம்  இராமகவுண்டர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.

கூட்டத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு ரூபா மூன்று வீதம் மானியம் வழங்கி வரும் தமிழக முதல்வர்  அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது எனவும், இதை வாராவாரம் உடனுக்குடன் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 10.00  உயர்த்தி வழங்க கேட்டுக் கொள்வது எனவும், சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கேட்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் சங்க தேர்தல் உடனடியாக நடத்த கோரப்பட்டது.  கூட்டத்துக்கு மோகணா, உமாராணி, ராணி கனகவள்ளி,  இலட்சுமி, அம்பிகா, ராதாமணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் முடிவில்   விஜயா நன்றி கூறினார்.

மாருதி மனோ