இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Ml) சார்பில் சாலைமறியல் போராட்டம்.!

பாபநாசம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Ml) சார்பில் சாலைமறியல் போராட்டம்.!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Ml) சார்பில் சாலைமறியல் போராட்டம்.!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கணபதி அக்ரகாரம் மூன்று வழி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(ml) சார்பில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

இதில் பாபநாசம் தாலுகா விசித்திர ராஜபுரம் கிராமத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரி செய்ய வேண்டும் எனவும் பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் சாலைகளைசீரமைக்க வேண்டும் என்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் சாலை மறியல் செய்தனர்.

மறியல் செய்தவர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் பேச்சுவார்த்தை நடத்தினார் மறியலை கைவிடச் செய்தார்.உடன் ஆய்வாளர் மகாலட்சுமி பாதுகாப்பு பணியில் இருந்தார்.

மறியலில் ஒன்றிய தலைவர் செல்லதுரை உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாபநாசம் இன்பம்