பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைபற்றிய ஆப்கானிஸ்தான். !

உலகம்

பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைபற்றிய ஆப்கானிஸ்தான். !

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளத்தை தாலிபான் கைப்பற்றி உள்ளது.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினர் மூலம் பாகிஸ்தானின் இந்த ராணுவ தளம் கைப்பற்றப்பட்டு உள்ளது. டிசம்பர் 30, 2024 அன்று காலை பாகிஸ்தானின் ராணுவ தளத்தை கைப்பற்றியதாக TTP கூறியுள்ளது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாலிபான் படையினர் களமிறக்கப்பட்டதாகவும்.. அந்த தாக்குதலில் தாலிபான் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தாலிபான்கள் பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஆக்கிரமித்துள்ள வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இராணுவத் தளம் சிறிது காலத்திற்கு முன்பு காலி செய்யப்பட்டதாகவும், இங்கு ராணுவ வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும் பாகிஸ்தான் சமாளித்து வருகிறது. ஆனால் அங்கே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாலிபான்களிடம் சரண் அடைந்த வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தாலிபான்களின் இந்த வெற்றி காரணமாக ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பல்வேறு ராணுவ தளங்களை பாகிஸ்தான் காலி செய்து வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் சண்டை:

ஆப்கானிஸ்தானில் உள்ளது போலவே பாகிஸ்தானில் தாலிபான் அமைப்பு உள்ளது. இந்த தாலிபான் அமைப்பின் ரகசிய தங்கும் இடங்கள், தளவாடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளது.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்று பாகிஸ்தான் தலிபான்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள சில ஆயுதக்குழு அமைப்புகளுக்கும் - இவர்களுக்கும் ஆகாது. பாகிஸ்தான் ராணுவத்திரும் இவர்களுக்கும் கூட மோதல் உள்ளது.

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தாக்குதல் நடத்துவதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.