ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதியின் ஆதிக்கத்தை கண்டித்து, கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
கிருஷ்ணகிரி
கிருட்டினகிரியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதியின் ஆதிக்கத்தை கண்டித்து, கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கிருட்டினகிரி - ஓசூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கிருட்டினகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு
03.03.2026 செவ்வாய்க்கிழமை இன்று காலை 11.00 மணியளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கத்தைக் கண்டித்து மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்து பேசினார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாவட்டத் துணை தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முருகேசன், இல. ஆறுமுகம், அ.செ.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், ஓசூர் கழக மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், கர்நாடக மாநில தி.க. தலைவர் வழக்கறிஞர் குணவேந்தன், மாநில செயலாளர் முல்லைகோ, மாவட்ட ப.க.நிர்வாகி இராம.சகாதேவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட ப.க.துணைத்தலைவர் மு.வேடியப்பன், ஒன்றிய தலைவர்கள் காவேரிப்பட்டணம் பெ.செல்வம், மத்தூர் சா.தனஞ்செயன், ஒன்றிய செயலாளர்கள் காவேரிப்பட்டணம் பெ.செல்வேந்திரன், ஊற்றங்கரை செ.சிவராஜ், ஓசூர் மாவட்ட துணைச்செயலாளர் ச. எழிலன், மாநகர செயலாளர் து. இரமேசு, ஈரோடு பாண்டியன், துரை.இராவணன், இளைஞரணி துணைத் தலைவர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட மாணவரணி நிர்வாகி ஆ.ஆர்த்தி, சி.இராசா, மு.இரஞ்சித், மு.புகழேந்தி, இரபிக் அகமது உள்பட கழகத்தோழர்கள் திரளாக கலந்துக்கொண்டனர். நிறைவாக கிருட்டினகிரி நகர செயலாளர் அ.கோ.இராசா நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது,
உறுதிசெய், உறுதிசெய்! ஒன்றிய அரசே உறுதி செய்! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதிசெய், தேவை, தேவை அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை, அமைத்திடு, அமைத்திடு, சமூகநீதியைக் கண்காணிக்க அதிகாரமிக்க ஆணையத்தை அமைத்திடு, அமைத்திடு ஒன்றிய அரசே அமைத்திடு!
பின்பற்று,பின்பற்று, திராவிட மாடலைப் பின்பற்று, சமூக நீதியை நிலைநாட்டுவதில் திராவிட மாடலைப் பின்பற்று,
போராடுவோம், வெற்றிபெறுவோம், வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!
எனும் முழக்கங்களை எழுப்பினார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ
