1 கோடியே 50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ரோபாட்டிக்ஸ் மற்றும் பிஎல்சியில் ஒரு அதிநவீன சிறப்பு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் திறந்து வைத்தார். !

கிருஷ்ணகிரி

1 கோடியே 50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ரோபாட்டிக்ஸ் மற்றும் பிஎல்சியில் ஒரு அதிநவீன சிறப்பு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் திறந்து வைத்தார். !

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் மூலம் ரூ.1 கோடியே 50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ரோபாட்டிக்ஸ் மற்றும் பிஎல்சியில் ஒரு அதிநவீன சிறப்பு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., துவக்கி வைத்து பார்வையிட்டார்.

உடன், டெல்டா எலக்ட்ரானிக் இந்தியா பிரைவேட் லிமிடட் தலைவர் பெஞ்சமின் லின், நிர்வாக இயக்குநர் ஸ்ரீ நிரஞ்சன் எஸ் நாயக், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக திட்ட இயக்குனர் கே.வி.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ