தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருத்தகையின் புதல்வி திருமண நிச்சயதார்த்த விழாவில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கேபிநாத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்பு..!
கிருஷ்ணகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருத்தகையின் புதல்வி திருமண நிச்சயதார்த்த விழாவில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கேபிநாத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்பு.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை மகளின் திருமண நிச்சயதார்த்த விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னாள் இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட துணைத் தலைவர், மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமான காங்கிரஸ் கட்சியினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இதேபோல திருமண நிச்சயதார்த்த விழாவில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
கோபிநாத், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி. இரகு ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ
