கிருஷ்ணகிரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி விவசாயிகளில் வயிற்றில் அடித்த மத்திய அரசுக்கும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தலைமையில் நடைப்பெற்ற இத்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்டத் தலைவர்களான ராஜா குமாரவேல், கிருஷ்ணமூர்த்தி, ஜேசுதுரை, நாராயணமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் ரகமத்துல்லா, நகர்மன்ற உறுப்பினர் வினாயகம், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முனீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும், நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மற்றும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து
கண்டன கோசங்களை எழுப்பினார்கள்,
மேலும் இதே போல ஓசூர், வேப்பனஹள்ளி, சூளகிரி, தளி, ராயக்கோட்டை, பர்கூர், காவேரிப்பட்டினம், மத்தூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்ட வஞ்சித்த பாஜக கட்சிக்கு துணை போகும் அதிமுக கட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்தில் திமுக நகர செயலாளர்களான அஸ்லாம், வேல்மணி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் டாக்டர் தகி, வாஜித், திமுக மகளீர் அணி புஸ்பா உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
