கரூர் சம்பவத்திற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு. !

கரூர்

கரூர் சம்பவத்திற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு. !

தவெகவின் நிகழ்ச்சி அனுமதி மனுவில் தவறுதல்கள் உள்ளன. முழு விசாரணை நடந்து, தேவைபடி மேலும் பெயர்கள் சேர்க்கப்படும்.

சோதனைக் குழு இடத்தைப் பரிசோதித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில் தவெக கட்சியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தவெக தலைவர் விஜயின் கரூர் பிரச்சார நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் மற்றும் 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சோகமாகப் பதிவாகியுள்ளது.

காவல்துறை அளித்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களான நெரிசலை கட்டுப்படுத்தல், அனுமதி இடங்களை தவெகவினர் மீறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தவெகவினர் மீதுகரூர் நகர போலீஸ் நேற்றிரவே வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுவரை விஜயின் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால் போலீஸார் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

இதன்படி, IPC 307 (கொலை முயற்சி) நெரிசை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தல்.

IPC 304A (அஜாக்கிரதையால் மரணம் ஏற்படுத்தல்) பாதுகாப்பு விதிகளை மீறி நிகழ்ச்சி நடத்தியதால் உயிரிழப்பு.

IPC 188 (அதிகாரிகள் உத்தரவை மீறல்) போலீஸ் அனுமதி நிபந்தனைகளை (நெரசல் கட்டுப்பாடு, இடங்கள்) புறக்கணித்தல்.

IPC 336 (அஜாக்கிரதையான செயல்)பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

A1. மதியழகன் - கரூர் மேற்கு மாவட்ட செயலாளர், A2. புஸ்ஸி ஆனந்த், A3. நிர்மல் குமார் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மீது மேலும் BNS பிரிவு 105 - கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.

BNS பிரிவு 110 - குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.

BNS பிரிவு 125 - மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை .

BNS பிரிவு 223 - பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.

TNPPDL சட்டம் பிரிவு 3 - பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

BNS-ன் பிரிவு 105, 'கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை' குறித்த வழக்கு. இது கொல்லும் நோக்கத்துடன் அல்லது மரணம் நிகழக்கூடும் என்று தெரிந்தும் செய்யப்படும் செயல்களால் மரணம் ஏற்பட்டால் கடுமையான குற்றமாகும். இந்த வழக்கில், ஒரு பொது நிகழ்வின் போது கூட்டத்தை முறையாக நிர்வகிக்கத் தவறுவதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதும் இந்தப் பிரிவின் கீழ் அலட்சியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

இந்தப்பிரிவின் கீழ் குற்றவாளிகள் ஆயுள் தண்டனை அல்லது 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். அபராதமும் விதிக்கப்படலாம். பிரிவு 304 'கொலைக்கு சமமான குற்றமற்ற கொலையை உள்ளடக்கியது. இருப்பினும், BNS பிரிவு 105, இது போன்ற பெரிய பொது நிகழ்வுகளின் போது கூட்டத்தை நிர்வகிப்பதில் அலட்சியமாக நடந்து கொண்டால் பொருந்தும். பிரபலங்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், திரையரங்க நிர்வாகம் போன்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிக கூட்டத்துடன் தொடர்புடைய அபாயங்களை எதிர்பார்த்து குறைக்க வேண்டும் என்பதை சட்டம் அங்கீகரிக்கிறது.

BNS -ன் பிரிவு 118(1) ஆபத்தான கருவிகள் அல்லது வேறு முறைகளைப் பயன்படுத்தி ஒருவர் வேண்டுமென்றே மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் போது செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரிவு பொதுவாக உடல் ரீதியான காயங்களைக் குறிக்கிறது என்றாலும், கூட்டத்தின் ஆபத்தான தன்மை, போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாததால் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம். இந்தப் பிரிவின் கீழ், குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஒரு நபர் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.20,000 வரை அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேரிடும். புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீதும் பிணையில் வரமுடியாத வழக்குகள் பதியப்பட்டுள்ளது. விரைவில் விஜய் மீதும் வழக்குகள் பாயலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி வெங்கடராமன் கூறுகையில், தவெகவின் நிகழ்ச்சி அனுமதி மனுவில் தவறுதல்கள் உள்ளன. முழு விசாரணை நடந்து, தேவைபடி மேலும் பெயர்கள் சேர்க்கப்படும். சோதனைக் குழு இடத்தைப் பரிசோதித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.