அரசு இசைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நேரில் ஆய்வு. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் உதவி இயக்குனர் சங்கரராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சேலம் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும், அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு எந்த விதமான வகையில் கலைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறித்து சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுருந்தார்.
இதன் அடிப்படையில் சென்னை கலை பண்பாட்டுத் துறையின் இயக்குனர் திருமதி கவிதாராமு உத்தரவின்படி இன்று மாவட்ட இசைப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் சேலம் மண்டல உதவி இயக்குனர் சங்கரராமன் ஆகியோர் மாவட்ட
இசைப்பள்ளியில் ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வரும் வயலின், குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், மிருதங்கம், பரதம், வாய்பாட்டு, தேவாரம் உள்ளிட்ட பல்வேறு கலைப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர். இதில் இசைப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் திறமைகளை கண்டு வியப்படைந்தனர்.
பின்னர் இது குறித்து பேசிய சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பேசுகையில்....
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல் கேட்டு இருந்தேன் அதன்படி கலை பண்பாட்டு துறையின் இயக்குனர் திருமதி கவிதா ராமு அவர்களின் உத்தரவின்படி இசைப்பள்ளியில் பயலும் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகளை மாணவ, மாணவிகள் அதிக ஆர்வத்துடனும், துடிப்புடனும் கற்றுவருவது மிகவும் பாராட்டும் விதமாக உள்ளது.
இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோருக்கு தனது நன்றினையும் தெரிவித்துக்கொண்டார்.
அப்போது இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிவேணி, மற்றும் சமுக நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஜெய்சன், பிரகாஷ் உள்ளிட்ட இசைப்பள்ளியின் ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ