ரூ. 32.50 கோடி செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க்.!
தூத்துக்குடி

ரூ. 32.50 கோடி செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க்.!
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் சுமார் 600 தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ரூ. 32.50 கோடி செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இப்பூங்காவில் Protogrowth Inc மற்றும் Pro1 Health systems ஆகிய நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.