ரூ.12.70 இலட்சம் மதிப்பிட்டில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா.!

கிருஷ்ணகிரி

ரூ.12.70 இலட்சம் மதிப்பிட்டில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், பெரியமுத்தூர் ஊராட்சி, அவதானப்பட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  கீழ் ரூ.12.70 இலட்சம் மதிப்பிட்டில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  தே.மதியழகன் கலந்து கொண்டு திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி தொடங்கி  வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், முன்னால் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணை தலைவர்கள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ