நகைக்கடையில் திருமணத்திற்கு நகை வாங்குவது போல் நடித்து கவனத்தை திசை திருப்பி 42 கிராம் தங்க நாணயங்களை திருடிச் சென்ற மூவர் கைது.!
சென்னை

திருவான்மியூர் நகைக்கடையில் திருமணத்திற்கு நகை வாங்குவது போல் நடித்து கவனத்தை திசை திருப்பி 42 கிராம் தங்க நாணயங்களை திருடிச் சென்ற மூவர் கைது.
சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை திருவான்மியூர், திருவள்ளுவர் நகர், 3வது மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் லால் சந்த் சிங்(54), இவரது மகன் ஹேமந்த் குமார்(23), கடந்த மாதம் 4 ம் தேதி காலை 9 மணியளவில் கடையில் இருந்த போது நகைக்கடைக்கு வந்த இருவரும் தம்பதிகள், மகன் திருமணத்திற்கு தாலி வாங்க வந்துள்ளதாக கூறி நகைகளை காட்ட சொல்லி பார்த்து வந்துள்ளனர்.
கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி அந்த நகையை காட்டுங்கள், இந்த நகையை எடுங்கள் என பேச்சுக் கொடுத்துக் கொண்டே லாவகமாக வந்திருந்த இருவரில் ஆண் நபர் தங்க நாணயங்களை ஒவ்வொன்றாக எடுத்து தனது லுங்கியில் மறைத்து வைத்துக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் வந்து நகைகளை வாங்கிக் கொள்வதாக கூறி கடையில் இருந்து வெளியேறினர்.
சிறிது நேரம் கழித்து ஹேமந்த்குமார் நகைகளை சரிபார்த்த போது 2 கிராம் தங்க நாணயங்கள் 6,
3 கிராம் தங்க நாணயம் 2,
4 கிராம் தங்க நாணயம் 6, என மொத்தன் 5¼ சவரன் தங்க நாணயங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
உடனடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்து, பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் நகைக் கடை உரிமையாளருடன் சென்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் விருதுநகரில் பதுங்கி இருந்த மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்ததில் அவர்க்ள் விருதுநகரை சேர்ந்த் கேசவன்(53), என்பதும் இவர் மீது ஏற்கனவே திருநெல்வேலியில் ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது,
பாண்டீஸ்வரி(50), திருநெல்வேலியில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது,
ராமநாதபுரத்தை சேர்ந்த சுந்தரி(45), இவர் மீது ராமநாதபுரம், ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இரண்டு திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது.
இது போன்று நகைக் கடைகளில் கவனத்தை திசை திருப்பி திருடுவதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களிடமிருந்து 8 கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மூவர் மீதும் 303(2), பிஎன்எஸ் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
S S K