பெண் காவலரிடம் செயின் பறிப்பு.! பொதுமக்கள் தர்ம அடி.!
சென்னை

சென்னையில் பெண் காவலரின் வாயைப்பொத்தி ஒன்றரை சவரன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு சமூக வலைதளங்கள் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றும் 25 வயது பெண் காவலர் பணி முடிந்து நேற்று இரவு 11.30 மணிக்கு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் ஏறினார். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, பிளாட்பாரத்தில் நடந்து சென்றபோது திடீரென ஒரு நபர் வாயைப்பொத்தி, பெண் காவலர் அணிந்திருந்த ஒன்றை சவரன் செயினை பறித்துவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
உடனே பெண் காவலர் கூச்சல் போடவே, ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் ஓடி வந்து போதை நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.பின்னர் இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போது செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் சிட்லபாக்கத்தை சேர்ந்த சத்திய பாலு (வயது 40)என்பது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் பெண்களுக்காக எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான சத்யபாலுவிடம் ரயில்வே காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தியபாலுவின் பின்னணி குறித்தும், இதற்கு முன்பு ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டியுள்ளாரா? எனவும் தனியாக ரயில்வே காவல் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.