பட்நாவிஸ்க்கு கட்டம் கட்டும் பிரதமர் மோடி.! முரளிதர் மோஹோல் அடுத்த முதல்வரா.! பரபரப்பில் மும்பை அரசியல் களம்

பட்நாவிஸ்க்கு கட்டம் கட்டும் பிரதமர் மோடி.! முரளிதர் மோஹோல் அடுத்த முதல்வரா.! பரபரப்பில் மும்பை அரசியல் களம்

மகாராஷ்டிராவில் முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே போட்டி உள்ள நிலையில் மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோலை புதிய முதல்வராக்கப்படலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ் பெயருடன் மேலும் சிலரது பெயரும் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தேவேந்திர பட்னாவிஸ், வினோத் தாவ்டே, ராதாகிருஷ்ணா, விகே பட்டில் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிப்பட்டு வரும் சூழலில் தான் தற்போது இன்னொருவரின் பெயர் முன்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் யார் என்றால் முரளிதர் மோஹோல். இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. மகாராஷ்டிராவில் வளரும் பாஜக தலைவராக இவர் உள்ளார்.

இந்நிலையில் தான் முரளிதர் மோஹோல் பெயரும் லிஸ்டில் உள்ளது.அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

முரளிதர் மோஹோல் தற்போது புனே லோக்சபா தொகுதியின் பாஜக எம்பியாக இருக்கிறார். அதோடு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக உள்ளார். கூட்டுறவு மற்றும் விமானத்துறையின் மத்திய இணை அமைச்சராக முரளிதர் மோஹோல் செயல்பட்டு வருகிறது. இவர் 1993ம் ஆண்டு முதல் அரசியலில் செயல்பட்டு வருகிறார். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட இவர் புனே மாநகராட்சியின் மேயராகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேவேந்திர பட்னாவிஸ் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் முரளிதர் மோஹோல் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர். மகாராஷ்டிராவில் பெரும்பான்மை சமுதாயமாக மராத்தா உள்ளது. இதனால் முரளிதர் மோஹோலை முதல்வராக்கி அந்த மக்களை சமாதானப்படுத்தி வாக்கு வங்கியை தக்க வைக்க பாஜக மேலிடம் விரும்புகிறது. 

அதேபோல் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பிரதமர் மோடியும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது மகாராஷ்டிரா மிகவும் முக்கியமான மாநிலமாகும். இங்கு ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே முதல்வராக இருந்துள்ளார். இப்போது மீண்டும் அவர் முதல்வரானால் பிரதமர் மோடிக்கு நிகரான செல்வாக்கு பெற வாய்ப்புள்ளது. இதனால் பாஜகவில் மோடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என்று அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.