மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அன்ன சத்திரமா? அல்லது குடிகாரர்களின் கூடாரமா?

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அன்ன சத்திரமா? அல்லது குடிகாரர்களின் கூடாரமா?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் , கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் மத்திய பகுதியாகும்.

இங்கு வேலைகள் காரணமாகவும், வியாபாரம் காரணமாகவும், ஊட்டி, ப்ளாக் தண்டர் என பல சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்காகவும் பலர் வந்து போவது வழக்கம்.

இங்கே உள்ள பேருந்து நிலையம் எப்போதும் கூட்டம் அதிகமாக காணக்கூடிய பகுதியாகும். இந்த பேருந்து நிலையத்திற்கு எதிரே மூனு சந்து பார் எப்போதுமே பேமஸ்.

அது மட்டுமல்லாமல் பேருந்து நிலையத்தை சுற்றி பல தவறுகள் நடந்து வருவது வழக்கமே.

அது போல நேற்றைக்கு பேருந்து நிலையத்தில் ஒரு ஆணும் பெண்ணும் குடி போதையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.

இதை தடுக்க சென்ற பயணிகளிடம் தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கேட்போர்களை அடிக்கவும் சென்றுள்ளனர் இந்த குடிகார கும்பல்.

இதையறிந்த போலீசார் உடனடியாக பெண் போலீசாரை அனுப்பி வைத்துள்ளனர். அவர்களும் சென்று தடுக்கவே போதையில் இருந்த அந்த பெண் காவல் துறையினரையும் கெட்ட வார்த்தைகளால் பேசி ஒரு பெண் போலீசின் கையை பிடித்து இழுக்க அந்த பெண் போலீசும் கீழே விழும் நிலை ஏற்பட்டது. 

பின்பு அருகிலிருந்தவர்கள் எட்டி உதைக்க குடிகார பெண் காவல் ஆளினரின் கையை விட்டு விட்டார்.

பகலில் ஊரெல்லாம் சுற்றி பிச்சை எடுத்து விட்டு இரவு நேரத்தில் மது, கஞ்சா என போதை பொருட்களை பயன்படுத்தி கொண்டு இரவு நேரங்களில் அட்டகாசம் செய்வதே இவர்களின் அன்றாட வேலை.

இதற்கு மேலே ஒரு படி போய் பார்த்தால் தங்களை கணவன் மனைவி எனக் கூறி கொண்டு பொதுவெளியான பேருந்து நிலையத்தில் குடும்பமே நடத்தி வருகிறார்கள் குடிகார ஆசாமிகள். 

இதே போல் அரசு மருத்துவமனையிலும் வசதியில்லாத ஏழை நோயாளிகளுடன் வருபவர்கள் இரவு நேரம் தங்க சத்திரங்கள் மற்றும் இருக்கைகளுடன் கூடிய பொதுவெளி கட்டிடங்கள் என உள்ளன.

இங்கும் இவர்களது அட்டகாசம் தாங்க முடியவில்லை என நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் இது போன்ற போதை ஆசாமிகளை களையெடுத்து பொதுமக்களை பாதுகாப்பார்களா? ?? 

பொறுத்திருந்து பார்ப்போம்.!

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )