பல்கலை கழகங்கள் சம்பந்தமாக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தமிழகம்

பல்கலை கழகங்கள் சம்பந்தமாக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் :

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் . நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பினார்.

ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் :

மேலும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, பட்டப்படிப்புகளில் கற்றல் முறைகள் தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரன் பிரதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.